தலைப்புச் செய்திகள்

ஈரான் கடற்படை வீரர்கள் 240 பேரும் இலங்கையிலிருந்து நாடு திரும்பினர்

இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட 240 ஈரானிய கடற்படை வீரர்களும் நேற்று (15) தாயகம் திரும்பினர்.

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, துருக்கிய ஏர்லைன்ஸ் விசேட விமானம் மூலம் இந்தக் குழுவினர் புறப்பட்டனர்.

நாட்டின் கடற்பரப்பில் அவர்களது கப்பல்களில் ஒன்று தாக்குதலுக்குள்ளானது, இன்னொரு கப்பல் தரிப்பதற்கு அனுமதி கோரியது. இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்தவர்கள் இலங்கையில் பாதுகாப்படன் இருந்து வந்தனர்.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டார்.

இப்பகுதியில் நடந்த தாக்குதலில் சேதமடைந்ததாகக் கூறப்படும் ஈரானிய கடற்படைக் கப்பலான ‘ஐரிஸ் தேனா’விலிருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும் இந்தக் குழுவில் அடங்குவதாக அவர் கூறினார்.

மீதமுள்ள 204 வீரர்கள், ‘ஐரிஸ் புஷேர்’ என்ற மற்றொரு ஈரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள்.