தலைப்புச் செய்திகள்

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு மதிப்பீடு

போர் காரணமாக தமக்கு 270 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது அந்த நாட்டின் ஆரம்ப கட்ட மதிப்பீடு என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் – ஈரானுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

270 பில்லியன் டொலர் என்பது இலங்கைப் பெறுமதியில் 85 லட்சத்து 85 லட்சத்து 10 ஆயிரத்து 992 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.

ஏற்கனவே, யுத்தத்தில் தமக்கு ஏற்பட்ட செலவு என்ன என்பதை இஸ்ரேல் நிதியமைச்சும் சில நட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.

ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய போரினால் இஸ்ரேலுக்கு 11 பில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளதாக அந்த நாட்டு நிதியமைச்சு கூறியிருந்தது.