
துருக்கியிலுள்ள தொழிற்கல்வி உயர்நிலை பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்தனர்.
அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவனான 18 வயது நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.
இந்தத் தாக்குதலில் 10 மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள், ஒரு உணவக ஊழியர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் காயமடைந்தனர்.
ஷொட்கன் துப்பாக்கி ஒன்றினால், மேற்படி நபர் இந்த தாக்குதலை நடத்தி விட்டு, கட்டடமொன்றினுள் ஒளிந்து கொண்டார்.
பின்னர், கட்டடத்தை பொலிஸார் சுற்றி வளைத்தமையை அடுத்து, அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவருகிறது.

இதன்போது, அந்தப் பாடசாலையை விட்டு – ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறினர்.
தாக்குதலுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.


