தலைப்புச் செய்திகள்

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

– நூருல் ஹுதா உமர் –

பெண்பிள்ளையொருவரின் படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றியதோடு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் – சந்தேக நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாட்சப் சமூக வலைத்திலிருந்த அவரின் படங்களைப திவிறக்கம் செய்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றியதோடு, தவறான நோக்கங்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்கள் எனச் சந்தேகிக்கப்படுகிற சந்தேகநபர்கள் தொடர்பில் இன்று (30) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பித்துள்ள நிலையில், இன்று இன்னுமொரு சந்தேக நபர் நீதவான் நூர்தீன் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

இன்னும் சில சந்தேக நபர்களை கைதுசெய்ய பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஏ.எம். நஸீல், எம்.வை. அன்வர் ஸியாத், ஷாமிலா மன்சூர், முஹம்மட் பிர்னாஸ் ஆகியோர் முன்னிலையாகினர்.