
அமெரிக்காவின் E-3 sentry விமானமொன்றை தாக்கி அழித்திருப்பதன் மூலம், மீண்டும் ஒரு பலத்த அடியை ஈரான் கொடுத்துள்ளது. அமெிக்காவின் மிக முக்கிய நவீன போர் விமானங்களில் ஒன்றான E-3 sentry விமானத்தை சஊதியில் வைத்து ஈரான் தாக்கியழித்திருக்கிறது.
அவாக்ஸ் (AWACS) எனப்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமான வகையை சேர்ந்ததுதான் – இந்த E-3 sentry போர் விமானம். இது வானில் பறக்கும் போது ஒரு கட்டுப்பாட்டு மையம் போல செயல்படும் என கூறப்படுகிறது.
அதாவது போயிங் 707 விமானத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம், பெரிய ரேடார் – டோம் மூலம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் – எதிரி விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை கூட கண்டறியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த விமானத்தின் வேலை, கண்காணிப்போடு நின்று விடாமல், போர் விமானங்களை இயக்குவது, எதிரி விமானங்களில் நடமாட்டத்தை கண்காணிப்பது, வான்வழி தாக்குதல்களை நிகழ் நேரத்தில் நிர்வகிப்பது என – இதன் பயன்கள் விரிவடைந்துள்ளன.

இதன் காரணமாக, நவீன போர்களில் இது ‘வானத்தின் கண்களாகவும் மூளையாகவும்’ செயல்படும் என கூறப்படுகிறது.
இன்றைய சூழலில் அமெரிக்காவிடம் 16 மட்டுமெ e3 சென்டரி விமானங்கள் இருப்பதால், இவை ஒவ்வொன்றும் மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஒரு விமானத்தை இழந்தால் கூட, அது அமெரிக்காவின் பாதுகாப்பையும் போர்க்கள ஒருங்கிணைப்பையும் பெருமளவு பாதிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
சஊதி அரேபியாவின் விமானத் தளத்தில் வைத்து, நேற்று முன்தினம் (28) ட்ரோன் மூலம் – இந்த விமானத்தை ஈரான் தாக்கியது.


