தலைப்புச் செய்திகள்

தான் கடமையாற்றும் வங்கியில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய் மோசடி செய்த முகாமையாளருக்கு விளக்க மறியல்

போலி நகைகளை தான் கடமையாற்றும் வங்கியில் அடகு வைத்தார் எனும் குற்றச்சாட்டில் -கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர் பெப்ரவரி 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இதன் மூலம் மோசடி செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் – நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் ஒஷத மிகார மகாராச்சி இந்த விளக்க மறியல உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளில் 26 முறை மோசடியைச் செய்ததன் மூலம், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களைப் புரிந்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள ஒரு அரச வங்கியின் முகாமையாளர் இந்திக நிஷாந்த அதிகாரி என்பவதே சந்தேக நபரே, இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.