தலைப்புச் செய்திகள்

அம்பலாங்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட – சுனாமி வட்ட பகுதியில் இன்று (27) நடந்த துப்பாக்கிச் சூட்டில், 28 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விருந்து நிகழ்வொன்றின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட நபர் மீது, அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறித்த நபர் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார். இறந்தவர் கலபொட பகுதியைச் சேர்ந்தவராவார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து அறியப்படவில்லை. தாக்குதலுக்கு பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.