தலைப்புச் செய்திகள்

பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறப்படும் 06 பொலிஸார் பணி நீக்கம்

த்தோலிக்க பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள – கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் 06 பொலிஸ் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 25ஆம் திகதி, கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கியதாகக் கூறி, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் கொட்டதெனியாவைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார், தான் தாக்கப்பட்டதாகக் கூறி நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரி 24 ஆம் திகதி இரவு – மத வழிபாட்டில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, ​​கம்பஹா – உடுகம்பொலவில் மோட்டார் சைக்கிள்களில் வந்ததாகக் கூறப்படும் பொலிஸார் அவரைத் தாக்கியதாக, பாரிதியார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களில் மூன்று சார்ஜென்ட்களும் மூன்று கான்ஸ்டபிள்களும் உள்ளனர்.