தலைப்புச் செய்திகள்

ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கைது

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது – அம்பகஸ்துவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் பதுளை பொலிஸ் பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் நேற்று மாலை (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விற்பனை செய்வதற்காக குறித்த போதைப்பொருளை அவர் வைத்திருந்தாரா என்பதை அறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.