
– எம்.எஸ்.எம். ஸாகிர் –
அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் வீதி, 07 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடும் பணிகளை நேற்று (09), அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
குறித்த ரஹ்மானியாபாத் வீதி 600 மீற்றர் தூரம் காபட் வீதியாக செப்பனிடப்படுகின்றது.

இதன் போது தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் சுல்தான் சத்தார், அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை செயற்பாட்டாளர்கள், பிரஜா சக்தி குழுக்களின் தவிசாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நாடாமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



