தலைப்புச் செய்திகள்

கொலை வழக்கில் 06 பேருக்கு மரண தண்டனை: அம்பாறை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

பதியத்தலாவை பகுதியில் 2015ஆம் ஆண்டு நடந்த இரண்டு கொலைகள் தொடர்பில் சந்தேக நபர்களாக பெயரிடப்படட் 06 நபர்களுக்கு அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

பதியத்தலாவைப் பகுதியில் 2015ஆம் ஆண்டு நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 06 நபர்களும், சம்பவ தினமன்று இரண்டு நபர்களைத் தாக்கி, பின்னர் அவர்களை வாகனம் ஒன்றினால் மோதி படுகொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த அம்பாறை மேல் நீதிமன்றம், சந்தேக நபர் 06 பேரும் கொலைக் குற்றவாளிகள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்த தீர்ப்பை அறிவித்தது.