தலைப்புச் செய்திகள்

இந்திய தலைநகர் புது டெல்லியில் நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை அருகே கார் ‘வெடித்ததில்’ குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர் என, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பையடுத்து தீப்பிழம்புகள் எழுந்ததையும், பல வாகனங்கள் வெடிப்பால் பாதிக்கப்பட்டதையும் இந்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.

செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்புக்கான சரியான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உத்தரபிரதேச பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(நன்றி: அல் ஜசீரா)