
‘அவிஷ்க புதா’ எனும் இலங்கை படகு ஒன்றை – பெருமளவு போதைப்பொருளுடன் மாலைதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாலத்தீவு பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் அனுமதியின்றி இந்தப் படகு நுழைந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாலைதீவு பொலிஸார்; படகில் இருந்து 355.9 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாலைதீவு பொலிஸார் கூறியுள்ளார்.
படகில் 58.6 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய ஹெரோயின் மற்றும் 297.3 கிலோகிராம் சந்தேகத்திற்குரிய ‘ஐஸ்’ போதைப்பொருள் அடங்கிய 24 சாக்குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39, 42, 28, 34 மற்றும் 63 வயதுடையவர்களாவர்.
‘அவிஷ்க புதா’ இலங்கை மீன்பிடிப் பகுகு – வெள்ளிக்கிழமை (07) மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக அந்தக் படகும் கைதான 05 பேரும் ஞாயிற்றுக்கிழமை (09) மாலைதீவு காவல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


