
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (10) சில உறுப்பினர்கள் பயன்படுத்திய புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகம் விசாரணை நடத்தும் என்று, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்திய உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி, நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சபாநாயகர் இந்த விடயத்தைக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தியமை குறித்து விசாரிக்குமாறு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.


