
2026ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்துக்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்த சில விடயங்களை அரசாங்கம் நிராகரித்ததாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கம் சொத்து வரி விதிக்குமாறு, சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த திட்டத்தை – அரசாங்கம் நிராகரித்ததாக அவர் கூறினார்.
ஆயினும், 2027ஆம் ஆண்டு தொடக்கம் சொத்து வரி அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

“சம்பள உயர்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தையும் நாங்கள் நிராகரித்தோம். பணவீக்க விகிதத்தை விட – சம்பள உயர்வு அதிகமாக இருந்தால் அதை செய்யாமல் விடலாம். ஆனால் இது பணவீக்க விகிதத்தை விடக் குறைவு என்று சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்தோம்” என்றும் அவர் தெரிவித்தார்.


