
இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகதென்ன, இன்று (28) அதிகாலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிஷாந்த உலுகேதென்னவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்து, பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில், பொத்துஹெரவைச் சேர்ந்த ஒரு இளைஞர் காணாமல் போனமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

அட்மிரல் நிஷாந்த உலுகதென்ன, ஜூலை 2020 முதல் டிசம்பர் 2022 வரை இலங்கை கடற்படையின் 24வது தளபதியாக பணியாற்றினார்.



