தலைப்புச் செய்திகள்

ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பெனாண்டோ நியமனம்

ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பி.ஏ.ஜே. பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் டொக்டர் நந்திக சனத் குமாரநாயக்க – மேற்படி நியமனக் கடிதத்தை இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, திருமதி பெனாண்டோவிடம் வழங்கினார்.

இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியான திருமதி பி.ஏ.ஜே. பெனாண்டோ, முன்னர் மேல் மாகாணத்தின் கல்வி, கலாச்சார, கலை விவகாரங்கள், விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.