
போக்குவரத்து விதிமீறல்களுக்காக GovPay செயலி மூலம் – அதே இடத்தில் (spot fines) அபராதங்களை செலுத்தும் நடைமுறை இன்று (28) முதல், மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
போக்குவரத்து விதிமீறல்களுக்காக அதே இடத்தில் செலுத்தும் வகையில் பொலிஸார் வழங்கும் அபராதங்களை இன்று முதல் GovPay செயலியைப் பயன்படுத்தி செலுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார்.
ஜுலை மாதம் முதல் GovPay செயலியைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, மேல் மாகாணத்தில் அதே இடத்தில் வழங்கும் அபராதங்களுக்காக GovPay செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் புதிய முறையின் முதல் கட்டமாக, இது மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் – நாடு தழுவிய அளவில் இந்த முறையைத் தொடங்க எதிர்பார்க்கிறது.



