
வழக்கு ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், நாமல் ராஜபக்ஷவும் இன்று (28) ஒரே விமானத்தில் மாலைதீவுக்கு பயணித்துள்ளனர்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மாலைதீவுக்கு பயணமானார். இதற்கிடையில், நாமல் ராஜபக்ஷ ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மாலைதீவுக்குச் சென்றதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருவரும் கொழும்பிலிருந்து மாலே செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 101 இல் பயணித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ஷ தனது பயணத் திட்டங்கள் குறித்து தனது சட்ட ஆலோசகருக்குத் தெரிவித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



