தலைப்புச் செய்திகள்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கிலிருந்து, துமிந்த விடுவிப்பு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் எனும் குற்றசாட்டில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கைத் தொடர ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சதுரிகா சில்வா தெரிவித்தமையை அடுத்து, முன்னாள் அமைச்சர் விடுவிக்கப்பட்டார்.

வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் – ஒரு பெண்ணிடம் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறித்த துப்பாக்கியின் உரிமையாளர் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியமையை அடுத்து, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட துமிந்த திசாநாயக்க, ஜூலை 14 அன்று மேல் நீதிமன்றம் வழங்கிய பிணையில் விடுவிக்கப்பட்டார்.