தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பதவிகளுக்கு, பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02ஆம் திகதி தொடங்கும்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் – அந்த சபைகளின் மேயர், பிரதி மேயர், தவிசாளர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படும் நபர்களின் பெயர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களின் மேற்படி பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதற்கு முன்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டியுள்ளதாகவும் என்று ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத்தில் பெரும்பான்மை இல்லாத இடத்தில், ஜூன் 02 ஆம் திகதி, முதல் முறையாக சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்.