தலைப்புச் செய்திகள்

கோசல எம்.பியின் இடத்துக்கு சமந்த வருகிறார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவரின் இடத்துக்கு சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர – ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

பொதுத் தேர்தலில் 40,000க்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்கவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் பதவியேற்பார்.

கோசல நுவன் ஜயவீரவின் மரணத்தையடுத்து, நாடாளுமன்றில் ஓர் உறுப்பினர் வெற்றிடம் ஏற்பட்டதாக நாடாளுமன்றம் நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தொடர்பான செய்தி: தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் எம்.பி மரணம்