
தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர தனது 38 வயதில் காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே மரணமடைந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட கோசல நுவான் 61,713 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 07 நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த தேர்தலில் பெற்றது. அந்த வகையில், இரண்டாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் கோசல நுவான் ஜயவீரவுக்குக் கிடைத்தது.



