
114 உள்ளூராட்சி சபைகளுக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய – முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு, மீதமுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக – தபால் மா அதிபர் எஸ்.ஆர்.டப்ளியூ.எம்.ஆர்.பி. சத்குமார உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று பிற்பகல் அல்லது நாளை (08) தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் தொடங்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், அனைத்து உள்ளூராட்சி சபைக்கான அனைத்து தபால் வாக்குச் சீட்டுகளும் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக அதிகாரி பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.



