தலைப்புச் செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 22 ஆயிரத்துக்கும் அதிக நிறுவனங்கள் டிமிக்கி கொடுத்துள்ளதாக தகவல்

ழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) பணம் செலுத்தவோ அல்லது பங்களிக்கவோ தவறிய 22,450 க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள், அரை அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்கள ஆணையாளரை நியமிப்பதற்காக இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு (EPF) கிட்டத்தட்ட 36 பில்லியன் ரூபாய் நிதி செலுத்தப்படாமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

“இந்த வாரம் டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து ஒரு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த முயற்சியின் மூலம், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் அதே வேளையில், தொழில் திணைக்களத்தில் உள்ள முழு அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.