தலைப்புச் செய்திகள்

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

Person voting

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (24) தொடங்குகிறது.

இதன்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் 2025 மார்ச் 27 அன்று நண்பகல் 12.00 மணிக்கு முடிவடையும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, மார்ச் 26 அன்று நண்பகல் 12.00 மணிக்கு கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடையும்.

நீதிமன்ற உத்தரவின் காரணமாக – மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளலைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.