தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர – மூன்று பேரைக் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்திற்குக் கிடைக்கும் அனைத்து எழுத்துபூர்வ குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக – அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இந்த மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்எனவும், ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநராக இதற்கு முன்னர் செந்தில் தொண்டமான் பதவி வகித்தார். அவர் காலத்தில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் நடந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போதைய ஆளுநர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்கள்