தலைப்புச் செய்திகள்

இலங்கையில் போதைப்பொருள் நுகர்வோரில் 50 வீதமானோர் கஞ்சா பாவிக்கின்றனர் : அவர்கள் ‘பார்வை மோகம்’ நோயினாலும் பாதிப்பு

ஞ்சாவை போதைக்காக பயன்படுத்துகின்றவர்கள் ‘பார்வை மோகம்’ (voyeurism) எனும் உள நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவிக்கின்றார்.

‘பார்வை மோகம்’ (voyeurism) என்பது – பெண்கள் குளிப்பதை அல்லது உடை மாற்றுவதை ஒளிந்து நின்று பார்த்து, சுய இன்பம் அனுபவிக்கும் நடத்தையைக் குறிக்கும் என அவர் விளக்குகின்றார்.

மேலும், இலங்கையில் போதைப்பொருள் பாவிப்பவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் கஞ்சா பாவிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புதிது YouTube தளத்துக்கு தொடர்ச்சியாக அவர் வழங்கி வருகின்ற ‘போதைப்பொருள் விழிப்புணர்வு’ தொடரில் பேசும் போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

கஞ்சா ஒரு மருந்துப் பொருளாக உள்ளபோதும், அது விஷ முறிப்பு செய்யப்படாமலும், வைத்தியரின் பரிந்துரையின்றியும் பயன்படுத்தப்படும் போது, கஞ்சா – ஒரு போதைப்பொருளாக மாறி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உளப் பிளவு நோய்க்கு உட்பட்டுள்ளவர்களில் 30 வீதத்துக்கும் அதிகமானவர்கள் அவ்வாறான நோயினால் பாதிக்கப்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக – கஞ்சா பாவனை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான முழுமையான வீடியோ பதிவை கீழே காணலாம்