தலைப்புச் செய்திகள்

பொருட்களின் விலைகள் 17 வீதமாக குறைத்துள்ளதாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார்

பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் சதோச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று – வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் உள்ள பொதுச் சந்தை வளாகத்துக்கு முன்னால் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட சதோச விற்பனை நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது, அமைச்சர் இதனைக் கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் அரசாங்கத்தால் பொருட்களின் விலையை 17% குறைக்க முடிந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“2025ஆம் ஆண்டில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக 150 க்கும் மேற்பட்ட சதோச விற்பனை நிலையங்களைத் திறக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில், சதோச வலையமைப்பை 1,000 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்தி, அவற்றை வாடிக்கையாளர் சேவை மையங்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம்,” என்றும் வசந்த சமரசிங்க கூறினார்.

“கடந்த மூன்று மாதங்களில், பொருட்களின் விலையை 17% குறைத்துள்ளோம். கூடுதலாக, கடந்த மாதத்தில் 40 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 8% குறைக்கப்பட்டுள்ளன.

எனவே, பொருட்களின் விலையைக் குறைத்து, மக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்குவதற்காக சதோச வலையமைப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான பதிவு