தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி – முதல் கட்டத்தில் இன்று மாலை விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும் வரை, காஸாவில் போர் நிறுத்தம் தொடங்காது என்று, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஆனால், பெயர் பட்டியல் வெளியிடுவதற்கான தாமதத்திற்கு தொழில்நுட்ப சிக்கலை ஹமாஸ் அமைப்பு காரணம் காட்டியுள்ளது.

போர் நிறுத்தம் அமுலுக்கு வரும்போது – தங்கள் இடங்களுக்குத் திரும்பும் நம்பிக்கையில், காஸாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், தங்கள் உடைமைகளில் எஞ்சியவற்றை பொதி செய்து கொண்டிருந்தபோது, நெதன்யாகுவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 08:30 மணிக்கு போர் நிறுத்தம் ஆரம்பித்து விட்டது.

போர் நிறுத்தத்தின் முதல் நாளில், இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் படி – காஸாவில் சண்டையை நிறுத்தவும், மூன்று இஸ்ரேலிய கைதிகளையும் 95 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: காஸாவில் போர் நிறுத்தம்; 19ஆம் திகதி அமுலுக்கு வருகிறது: ஆனாலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

இதையும் பாருங்கள்