
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில – ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வௌிப்படுத்தி – விசாரணைக் குழுவின் அறிக்கையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என – அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில



