
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைகள் இல்லை என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ நிஹதெரிவித்துள்ளார்.
முன்னாாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு 163 பேரைக் கொண்ட பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இவர்களில் 50 விசேட அதிரடிப்படையினரும், பிரமுகர் பாதுகாப்பு பிரிவின் 06 பேரும் அடங்குகின்றனர்.
மேலும் மேற்படி பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் இடமாற்றம் வழங்கப்பட்ட சிலர் உள்ளடங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



