தலைப்புச் செய்திகள்

விமானத்தில் வந்த ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் சிக்கியது

கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 2.14 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள், கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சிய முனையத்தில் வைத்து மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொலம்பியாவின் பொகோடாவிலிருந்து -கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த பொதியிலிருந்த மின் சாதனமொன்றில், சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 23 மற்றும் 24 வயதுடைய இருவர் மற்றும் பொதிகள் சேவை முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.