
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அந்தக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கட்சியின் தீர்மானத்துக்கு மாற்றமாக – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தரவுக்கிணங்க, அலிசாஹிர் மௌலானாவை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
இனையடுத்த கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அலிசாஹிர் மௌலானா நீதிமன்றத்தை நாடினார். இதன்போது, அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்திருந்தது.



