தலைப்புச் செய்திகள்

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

னாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கன சந்தர்ப்பம் இன்றும் (11) நாளையும் (12) வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 4, 5, 6 ஆகிய திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது. அதன் போது வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்கலாம்.

இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூல வாக்குகள் பயன்படுத்தப்படாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதியோ அல்லது வேறு நாட்களிலோ – தபால் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள், தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியும்.