
குழந்தைகளுக்கு அதிக அளவிலான பரசிட்டமோல் கொடுப்பதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகவும், பல குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
“வைத்தியர்களின் பரிந்துரைகளில் பரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது – அதிகளவு பரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும்.
சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என கண்டறிந்தால் பரசிட்டமோலை அதிக அளவில் கொடுக்கின்றனர்.
இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.



