தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் பணிகளுக்காக 54 ஆயிரம் பொலிஸார் பணியமர்த்தப்படுவர்

ஜனாதிபதித் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக 54,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 13,000 வாக்குச் சாவடிகளிலும், 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவதோடு, தேர்தல் காலத்தில் 3,200 பொலிஸ் நடமாடும் ரோந்து வாகனங்கள் இயங்கும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்) அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சட்டவிரோத கட்அவுட்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அகற்ற 1,500 தொழிலாளர்களை பொலிஸார் நியமித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் தேர்தல் கடமைகளுக்காகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காகவும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்புக்காக 260க்கும் மேற்பட்ட பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.