
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் இன்று (29) வெளியிடப்பட்டது.
சஜித் பிரேமதாசவின் ‘அனைவருக்கும் வெற்றி’ என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் 04 செப்டம்பர் 2024 அன்று வர்த்தக சமூகம் மற்றும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பிலான விளக்கமொன்றை ஐக்கிய மக்கள் கூட்டணி உறுப்பினர்கள் வழங்கினர்.
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கீழே தமிழில் காணலாம்:



