யானைகளின் தாக்குதலில் நிந்தவூரைச் சேர்ந்த இருவர் ஒரு வாரத்தினுள் உயிரிழப்பு

🕔 August 29, 2024

– பாறுக் ஷிஹான் –

நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் – யானை தாக்கி தாக்கி, ஒரே வாரத்தினுள் உயிரிழந்துள்ளனர். நேற்று (28) புதன்கிழமை ஒருவரும், இம்மாதம் 20ஆம் திகதி மற்றொரு நபரும் இவ்வாறு உயிரிழந்தனர்.

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமை வட்டை வயல் பிரதேசத்தில் நேற்று புதக்கிழமை (28) காலை 8.45 மணியளவில், பாதை ஊடாக பயணித்த ஒருவர் யானை தாக்கி உயிரிழந்தார்.

நிந்தவூரைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க  மீராலெப்பை முகம்மது முஸ்தபா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர், மேற்படி நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க இம்மாதம் 20 ஆம் திகதி மாலை – மணல்  அகழ்வு வேலைக்கு சென்ற நிந்தவூர் 21 ஆம் பிரிவை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஆதம்பாவா நவாசிம் என்பவரும் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்