
ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கூறி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகையை 100 மில்லியன் ரூபாவை, அவர் செலுத்தி முடித்துள்ளார்.
குறித்த தொகையில் செலுத்துவதற்கு மிகுதியாகவிருந்த 18 மில்லியன் ரூபாயினையும் அவர் இம்மாதம் 16ஆம் திகதி செலுத்தி முடித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெறவுள்ளதாக உளவுத் தகவல்கள் எச்சரித்திருந்தும், அந்தத் தாக்குதலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பல அதிகாரிகளுகள் தடுக்கத் தவறியமைக்காக, அந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
அந்த வகையில், குறித்த 100 மில்லியன் ரூபாயினையும் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30க்குள் செலுத்தி முடிக்க வேண்டுமென நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
தொடர்பான செய்தி: தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி முடிக்க, 2033 வரை அவகாசம் கோரி மைத்திரி மனுத்தாக்கல்



