திகா VS வேலுகுமார் அடிதடி: யார் சரி? யார் பிழை?
மரைக்கார் –
நாடாளுமன்ற உறுப்பினர்களான பி. திகாம்பரம் மற்றும் எம். வேலுகுமார் ஆகியோருக்கிடையில் கைகலப்பு நடந்ததை சக்தி ரிவியின் நேற்றைய (20) சமர் நிகழ்ச்சியில் கண்டோம்.
இது தொடர்பில் பல்வேறு கருத்துகளும் வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. இவர்களில் யார் சரி? யார் பிழை? என்பது தொடங்கி – இதனை சக்தி ரிவி ஒளிபரப்பியது சரிதானா? என்பது வரையில் இந்த விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது.
திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோரின் அரசியல் ஒருபுறமிருக்க, நேற்று நடந்த சண்டையில் முழுத் தவறும் திகாம்பரத்தினுடையவை என்பதுவே நமது அவதானமாகும்.
வேலுகுமாரை ‘மடையன்’ என்று நாகரிகமற்றுப் பேசியமை, ‘பார் (Bar – சாராயக்கடை) குமார் என்று கூறியமை என, அனைத்துத் தவறுகளையும் திகாம்பரமே முதலில் செய்தார். மனோ கணேசன் கூறுகின்றமை போல், திகாம்பரத்தை வேலுகுமார் கோபப்படுத்தவில்லை. மாறாக, வேலுகுமாரைத்தான் திகாம்பரம் கோப்படுத்தினார். இவற்றினை பொறுக்க முடியாத ஒரு கட்டத்தில்தான், “நான் Bar குமார் என்றால், நீ குடு (போதைப்பொருள்) திகா” என்றார் வேலுகுமார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் – வேலுகுமாரை திகாம்பரம் அடிக்கத் தொடங்கினார்.
சமர் நிகழ்ச்சியில் திகாம்பரம் தன்னை நாகரீமற்ற ஒருவராகவே தொடர்ந்தும் காண்பித்துக் கொண்டிருந்தார். வேலுகுமாரை தொடர்ச்சியாக “நீ” என்றுதான் திகாம்பரம் பேசிக் கொண்டிருந்தார்.
சண்டை முடிந்து திகாம்பரத்தை கதிரையில் உட்கார வைத்த போது – அவர் தடுமாறிய காட்சி, உடல் ரீதியான தடுமாற்றமாக மட்டும் தெரியவில்லை.
சக்தி ரிவி இந்த வண்டவாளத்தை எதற்காக வெளியில் கொண்டுவந்தது என்பது ஒருபுறமிருக்க, இதனைக் கொண்டு வந்திராவிட்டால், இவர்கள் எவ்வளவு அசிங்கமானவர்கள் என்பதை மக்கள் எப்படித்தான் தெரிந்து கொள்வதாம்?!
தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர்கள் திகாம்பரம், வேலுகுமார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்துச் சண்டை