தலைப்புச் செய்திகள்

அலிசாஹிர், வடிவேல் அமைச்சர்களாக நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா – அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் – தொழிலாளர் ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று (21) இவர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் – ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியிலிருந்து 2023 டிசம்பரில் நீக்கப்பட்ட பின்னர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இவர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதேபோன்று, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா,எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மு.காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் அலிசாஹிர் – ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அலிசாஹிர் மௌலானவை கட்சியி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாக மு.காங்கிரஸ் அறிவித்தது.