
ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குச் சீட்டு 27 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் வாக்குச் சீட்டு – ஒற்றை வரிசையா அல்லது இரட்டை வரிசையா என்பதை தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்று – அரசாங்க அச்சகத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரட்டை வரிசை வாக்குச் சீட்டாக இருந்தால் , வாக்குச் சீட்டு 13.5 அங்குல நீளமும் அகலமும் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
“ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ள மிக நீண்ட வாக்குச்சீட்டு இதுவாகும்” என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதனால் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நீண்ட வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு – அதிக செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டு சுமார் 25 அங்குல நீளமாக இருந்தது.



