அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 26 வயது இளைஞர் பலி

🕔 August 16, 2024

ஸ்ரீபுரவிலுள்ள கெமுனுபுர பிரதேசம் பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் – குறித்த நபரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சூட்டுக்கு உள்ளானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஸ்ரீபுர – கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்