விடுதலையான சூட்டுடன் நாடாளுமன்றம் வந்த அலி சப்ரி: ஜனக ரத்நாயகக்வை பதவி நீக்கும் வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டார்

🕔 May 24, 2023

ங்கம் மற்றும் கைபேசிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, அதற்காக அபராதம் செலுத்தி வெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று நாடாளுமன்றில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்கும் பிரேரணைக்கு எதிராகக வாக்களித்தார்.

துபாயிலிருந்து மேற்படி பொருட்களைக் கடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், இன்று நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

அவர் 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கியஸ்தர்கள் பகுதியில் வைத்துக் கைதானார்.

இதன் பின்னர்75 லட்சம் ரூபா அபாரதம் விதிக்கப்பட்ட நிலையில் அலி சப்ரி விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்