அமைச்சர் மனுஷவின் பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டு, ஆபாச இணையத்தளமும் இணைப்பு

🕔 May 24, 2023

மைச்சர் மனுஷ நாணயகாரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது. ஆயினும் பின்னர் அது அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதம், அவரின் பேஸ்பக்கில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட போதே, இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது.

இதனையடுத்து ஹேக்கர்கள், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச இணையத்தளத்தை இணைத்தனர்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்