ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து நீக்கும் வாக்கெடுப்பு வெற்றி

🕔 May 24, 2023

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பிரேரணைக்கு எதிராக 77 வாக்குகள் கிடைத்தன..

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருந்து ஜனக்க ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (24) இடம்பெற்றது.

சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பித்தார்.

அதன் மீதான விவாதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆரம்பித்து வைத்தார்.

இந்த வாக்கெடுப்பையும் அதற்கு முன்னரான விவாதத்தினையும் நாடாளுமன்றுக்கு வருகை தந்து காண்பதற்கு, நாடாளுமன்ற செயலாளரிடம் ஜனக ரத்நாயக்க அனுமதி கோரியிருந்த போதிலும், அந்த சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்படவில்லை.

தொடர்பான செய்தி: தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்