ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்
தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணித்துள்ளார்.