சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு

🕔 February 27, 2023

– ஐ.எல்.எம். நாஸிம் –

ம்மாந்துறை பகுதியில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் தேங்கியுள்ள நீரில் – மூழ்கிப் பலியான சிறுவனின் சடலம் இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்மாந்துறை சென்னல் கிராமம் 1ஆம் பிரிவில் கல்குவாரி அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் நீர் தேங்கியுள்ளது. அதில் குளித்த12 வயது சிறுவன் – நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலுள்ள நீர்க் குட்டையில் – மரணமான சிறுவன், தனது நண்பர்கள் இருவருடன் சென்றிருந்த நிலையில், அவர்களை குட்டையில் குளிப்பதற்காக அழைத்துள்ளார். அவர்கள் முடியாது என்று கூறவே, குறித்த சிறுவன் உயரமான பாறையில் ஏறி – நீரில் குதித்துள்ளார்.

இந்த நிலையில் குட்டையின் ஆழத்தினை அறியாமல் பாய்ந்த அச் சிறுனை காணவில்லை என – அங்கிருந்த இரு சிறுவர்களும் சத்தம் போட்டு கூச்சலிட்டதாக, பொலிஸாரிடம் அவர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்த மரணித்த சிறுவனின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் கல்குவாரி அமைத்து மலைகளை உடைத்ததன் காரணமாக இந்தக் குழி 20 வருடங்களாக அங்கு காணப்படுவதாகவும், இது கிட்டத்தட்ட 30 அடி ஆழமானது என்றும் அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்