தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி, ஐ.ரி.என். நிறுவனங்களுக்கு, முன்னாள் தலைவர்கள் மீளவும் நியமனம்

லங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின முன்னாள் தலைவராகப் பதவி வகித்த, சட்டத்தரணி ரவி ஜயவர்தன மீளவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ஐ.ரி.என்) முன்னாள் தலைவர் சமன் அதாவுட ஹெட்டி, மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தங்களுக்கான நியமனக் கடிதங்களை ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடமிருந்து இன்று திங்கட்கிழமை காலை பெற்றுக் கொண்டனர்.

ரவி ஜயவர்த்தன மற்றும் சமன் அதாவுட ஹெட்டி ஆகியோர், அமைச்சரவை மாற்றத்தினையடுத்து தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர்.

இதேவேளை, லேக் ஹவ்ஸ் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது.